சென்னை: சட்டவிரோதமாக செயல்பட்ட 2 ஹூக்கா பார்கள் மூடல் - 3 பேர் கைது!

சென்னை: சட்டவிரோதமாக செயல்பட்ட 2 ஹூக்கா பார்கள் மூடல் - 3 பேர் கைது!

சென்னை: சட்டவிரோதமாக செயல்பட்ட 2 ஹூக்கா பார்கள் மூடல் - 3 பேர் கைது!
Published on

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு ஹூக்கா பார்கள் மூடப்பட்ட நிலையில், அதன் மேலாளர்களான 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ரெஸ்டாரண்ட் நடத்துவதுபோல் ஹூக்கா பார்கள் நடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தேனாம்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட டிடிகே சாலையில் மொக்கா என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த ரெஸ்டாரண்டில், கீழ் அறை அமைத்து ஹூக்கா பார் நடத்தியதும், ஆஸ்டின் நகர் கணபதி தெரு பகுதியில் நடத்தப்பட்டு வந்த ரெஸ்டாரண்டின் மொட்டை மாடியில் ஹூக்கா பார் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு ஹூக்கா பார்களின் மேலாளர்களான தினேஷ், மோஹித், மோஹன்லால் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 ஹூக்கா குடுவைகள், பல வண்ண ஃபிளேவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com