\
தஷ்வந்த்திற்கு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட்

தஷ்வந்த்திற்கு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட்

தஷ்வந்த்திற்கு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட்
Published on

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஆஜராகாததால் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணைக்காக கடந்த 5ஆம் தேதி ஆஜராக தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் ஆஜராகாததால் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தாயைக் கொன்ற வழக்கில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக காவல்துறை சார்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தஷ்வந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த செங்கல்பட்டு நீதிமன்றம், 13ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில்‌ ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதற்கிடையே புழல் சிறையில் தஷ்வந்த் உயர்மட்ட பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com