சட்டவிரோத கருக்கலைப்பு: மருத்துவரை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது

செங்கல்பட்டு அருகே 12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த மகிதா, 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவரை மிரட்டி 12 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அம்மருத்துவர் அளித்த புகாரின் பேரில், தாம்பரம் ஆணையர் விசாரணை நடத்தினர்.

இதன் அடிப்படையில் ஆய்வாளர் மகிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீதும் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் பொன்னேரி அருகே பதுங்கியிருந்த மகிதாவை தனிப்படையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com