குற்றம்
குடிபோதையில் மகனால் சித்தப்பாவுக்கு நேர்ந்த கொடூரம்
குடிபோதையில் மகனால் சித்தப்பாவுக்கு நேர்ந்த கொடூரம்
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொலைசெய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வடக்குத் தெரு மண்டகொளத்தூர் முனியப்பா என்பவரின் மகன் குமாரும் இவரது அண்ணன் மகன் ராமதாஸும் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தங்கி மேஸ்திரி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையல், தங்கியிருந்த இடத்தில் இருவரும் சேர்ந்து குடித்துவிட்டு குடிபோதையில் ஏற்பட்ட வாய் தகராறில் ராமதாஸ் அவரது சித்தப்பா குமாரை வயிறு மற்றும் கை பகுதியில், சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே குமார் பலியானார்.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்