வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி.. போலி விசா நகலை கொடுத்து 175 பேரிடம் ரூ.1 கோடி கைவரிசை!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 175 பேரிடம் போலி விசா நகலை கொடுத்து ஒரு கோடி ரூபாய் மோசடி....
duplicate visa
duplicate visapt

வேலையில்லாதவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கிறது என்றால், அவ்வேலையில் எப்பாடு பட்டாவது சேர்ந்து விடுவது என்ற மனநிலையில் தான் இருப்பார்கள். இப்படி பட்டவர்களை தேடி எடுத்து ஏமாற்றுவது என்பது கொடுமையின் உச்சம். அப்படி பட்ட ஒரு சம்பவம் தான் விருத்தாசலத்தில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் அருகே கடலூர் ரோட்டில் ஜெட்வே இந்தியா என்ற தனியார் நிறுவனம் குவைத் நாட்டுக்கு, கொத்தனார், கார்பெண்டர், ஸ்டீல் பிட்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட தொழிலாளர்கள் தேவை என செய்தித்தாள்களின் விளம்பரம் தெரிவித்து ஆள் தேர்வும் நடைப்பெற்றது.

இந்த நிலையில் விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட நபர் தங்களது பாஸ்போர்ட்டையும், 50,000 ரூபாய் முதல் 70 ஆயிரம் வரை அவர்களிடம் முன்பணம் செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், பணம் செலுத்தியவர்களுக்கு போலியான விசா நகலை அளித்துவிட்டு ஒரு சிலருக்கு மட்டும் பாஸ்போர்ட்டை தபாலில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சந்தேகம் அடைந்த நபர்கள் விருத்தாசலம் பகுதிகளில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அப்போது அவர்கள் ஏமாற்று பேர்வழி என்பது தெரியவந்தது. அவர்கள், சரியான பதிலும் அளிக்கவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தனர். எனவே மோசடியில் ஏமாற்றப்பட்ட பணத்தை திரும்பி பெற்றுத் தருமாறு விருத்தாசலம் காவல் நிலையத்தில் 175 பேர் புகார் மனு அளித்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்து உள்ளதாகவும் மோசடி செய்த நபரை கண்டுபிடித்து பணத்தை பெற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டி: ஏழுமலை , சிருவரப்பூர் , பணம் கொடுத்து ஏமாந்து பாதிக்கப்பட்டவர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com