“தீரன் படம்” போல் நடந்த சேஸிங்! ராஜஸ்தான் ஆரவல்லி மலைத்தொடரில் வைத்து அதிரடி கைது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை, ஹரியானா-குஜராத் எல்லைப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.
ஏடிஎம் கொள்ளை
ஏடிஎம் கொள்ளைR. GOVINDARAJULU

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய மிகப்பெரிய கொள்ளை சம்பவமானது, மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலை பொழுதில், 4 ஏடிஎம் எந்திரங்களை கேஸ் வெல்டிங் வைத்து, வெட்டி எடுத்த குற்றவாளிகள், சுமார் 72 லட்சம் மற்றும் 50ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலைR. GOVINDARAJULU

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் அவர்களால் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும்பணியில் தீவிரமாக களமிறங்கியது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை.

தனிப்படை அமைத்த திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர்!

தொடர் தேடுதல் வேட்டையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப், ஆசாத் ஆகிய இருவரும், முதலில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை காவல்துறை
திருவண்ணாமலை காவல்துறைR. GOVINDARAJULU

அதனைத்தொடர்ந்து கொள்ளையர்களுக்கு உதவியாக இருந்த, கோலார் பகுதியைச் சேர்ந்த குதரத் பாஷா மற்றும் அப்சர் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் என பறந்த தனிப்படை!

நான்கு பேரை கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளிகள் அனைவரும், வெளி மாநிலங்களுக்கு தப்பித்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி புதுடெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் முதலிய மாநிலங்களுக்கு படையெடுத்தனர்.

ஏடிஎம் கொள்ளை
ஏடிஎம் கொள்ளைR. GOVINDARAJULU

72 லட்ச ரூபாய் ஏடிஎம் கொள்ளைக்கு முக்கிய காரணமாக கருதப்பட்ட குற்றவாளி, நிஜாமுதீன் கைது செய்யப்பட்ட நிலையில், 6ஆவது குற்றவாளியான சிராஜுதீன் ஹரியானாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஆரவல்லி மலைத்தொடரில் வைத்து கைது செய்யப்பட்ட குற்றவாளி!

இதையடுத்து ஏழாவது குற்றவாளியாக கருதப்பட்ட வாஹித் என்பவனை, அசாமில் வைத்து கைது செய்யப்பட்டு விமானம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டான். ஏடிஎம் கொள்ளையில் மொத்தமாக 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கொள்ளைக்கு முக்கிய மூளையாக செயல்பட்டு வந்த ஆசீப் ஜாவேத் என்பவன் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்துவந்தான்.

ஏடிஎம் கொள்ளை
ஏடிஎம் கொள்ளைR. GOVINDARAJULU

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ஆசீப்-ஜாவேத் இருக்கும் இடம் தெரியவந்தநிலையில், “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் போல் சேஸிங்கில் ஈடுபட்டது தனிப்படை காவல்துறை. தீரன் படம் போல் நான்கு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் விடாமல் தேடியலைந்த போலீசார், இறுதியாக ஹரியானா-ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில், பதுங்கியிருந்த ஆசீப்-ஜாவேத்தை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஆசீப்-ஜாவேத் இடமிருந்து ரூ.15 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் ஒன்றை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், விமானம் மூலம் திருவண்ணாமலை அழைத்துவந்தனர்.

ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மொத்தமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து இதுவரை 3 கார்கள், 1 கண்டெய்னர் லாரி மற்றும் ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீரதீர செயலை அறிந்த தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினருக்கு ஒரு லட்ச ரூபாய் வெகுமதி அளித்து பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com