மசாஜ் பார்லரில் பணிபுரிந்த தாய்லாந்து பெண் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

மசாஜ் பார்லரில் பணிபுரிந்த தாய்லாந்து பெண் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

மசாஜ் பார்லரில் பணிபுரிந்த தாய்லாந்து பெண் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
Published on

நேற்று சூரத்திலுள்ள ஒரு வாடகை வீட்டில் தாய்லாந்து பெண் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். அந்த பெண் படுக்கையில் எரிந்து சடலமாக கிடந்த நிலையில், அவரது அறையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு படுக்கை சேதமடையவில்லை.

சூரத்தின் மக்தல்லா பகுதியில் 27 வயதான பெண் தனது வாடகை  வீட்டில்  இறந்து கிடந்தார். இறந்த பெண் வனிந்த பவுசோர்ன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பவுசோர்ன் மாக்டல்லாவில் ஒரு வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்தார். இவர் தாய்லாந்தின் ரோய் இ.டி மாகாணத்தில் எம்.ஏ. டி மீவாங் புவாவில் வசிப்பவர். பவுசோர்னின் கணவரும் மகனும் தாய்லாந்தில் வசிக்கிறார்கள், அவர் இங்கு  ஒரு பார்லரில் பணிபுரிந்தார்.

இந்த நிலையில் நேற்று தரையில் வைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் மெத்தை முற்றிலும் எரிந்துபோய் அவரும் எரிந்து சடலமாக கிடந்தார், ஆனால் அறையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு படுக்கைக்கு தீ பிடிக்கவில்லை. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அதிகாலை 1.30 மணியளவில் இன்னோவா காரில் மூன்று பேர் அந்த பகுதிக்கு வந்திருந்தனர் என கூறுகின்றனர். அந்த கட்டிடத்தின் தரை தளத்தில் சிலர் வாழ்கின்றனர். இருப்பினும், அவர்களில் யாரும் நேற்று அதிகாலை 5 மணி வரை தீ பற்றி அறியவில்லை. அக்கம்பக்கத்தினர் சிலர் தீ விபத்தை கவனித்து, வீட்டு உரிமையாளர் நாகின் படேலுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த வழக்கை  விசாரிக்கும் அதிகாரி, கொலைக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிகிறது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம். போதைப்பொருள்  பயன்படுத்தி  இருந்ததால் அந்தப் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com