பயிர்க்கடன் முறைகேடு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் பணியிடை நீக்கம்

பயிர்க்கடன் முறைகேடு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் பணியிடை நீக்கம்
பயிர்க்கடன் முறைகேடு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் பணியிடை நீக்கம்

பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2018 -19 ஆம் ஆண்டு பயிர்க்கடன் வழங்கியதில், வங்கியின் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த ரவி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் திருவாரூர் மண்டல இணைப்பதிவாளரிடம் புகார் மனு அளித்திருந்தனர். புகார் குறித்து செயல் முறை ஆய்வு குழு தப்பளாம்புலியூர் கூட்டுறவு வங்கியில் விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் முறைகேடாக 12 பேருக்கு ரூ.6,50,000 ரூபாய் பயிர்க்கடன் கொடுத்ததும், அதில் 5 பேரிடமிருந்து ரூ.2,01,700 ரூபாய் மட்டும் திருப்பிச் செலுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதேபோல கூட்டுறவுச் சங்கத்தில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஒரு கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 58 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சங்க உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சங்க உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன் வழங்கும் இலக்கை எட்டாததோடு, சங்க உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கை மீறல் ஏற்படுத்தியதால் சங்கத்தின் தலைவர் ரவியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சித்ரா உத்தரவிட்டுள்ளார். துணைத் தலைவராக இருக்கும் தங்கையன் என்பவரை பொறுப்பு தலைவராக நியமித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com