வேலூர் மாவட்டம் பாணாவரத்தில் ஆரம்ப சுகாதார பணியாளர் மல்லிகாவிடம் செயின் பறித்தவர்களின் புகைப்படம் போலீஸார் வெளியிட்டுள்ளார்.
பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர் மல்லிகா. இவர் கடந்த 20 ஆம் தேதி பணி முடித்து விட்டுக்கு தனது கணவர் வீராசாமியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாணாவரம்-மேல்வெங்கடாபுரம் அடுத்த மாங்காடு தைலம் தோப்பு அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் மல்லிகா அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். செயினை பறித்தபோது மல்லிகா நிலை தடுமாறி கிழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பாணாவரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 2 பேரின் புகைபடத்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ளார். இவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவர் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட காவல் அலுவரகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கொடுக்க வேண்டிய எண்கள்:
வேலூர் மாவட்ட காவல் அலுவலகம் - 0416-2255999, 9498105102.
குத்தாலிங்கம் டிஎஸ்பி - 9498145347,04177-237123 அரக்கோணம் .
மகாலிங்கம் ஆய்வாளர் - 9498147700 பாணாவரம்.