\
பெரம்பலூர்: குப்பை கொட்ட சென்ற இடத்தில் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்!

பெரம்பலூர்: குப்பை கொட்ட சென்ற இடத்தில் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்!

பெரம்பலூர்: குப்பை கொட்ட சென்ற இடத்தில் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்!
Published on

பெரம்பலூர் அருகே குப்பை கொட்ட சென்ற பெண்ணிடம் 7 சவரன் தாலி செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பறித்துசென்ற சம்பவம் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் எளம்பலூர் சாலை பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்பவரின் மனைவி கவிதா. இவர் குப்பை கொட்டுவதற்காக சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கவிதா அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இது தொடர்பாக பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்து வருகின்றனர். குப்பை கொட்ட சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பெண்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com