\
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : சிபிஐ விசாரிக்க ஒப்புதல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : சிபிஐ விசாரிக்க ஒப்புதல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : சிபிஐ விசாரிக்க ஒப்புதல்
Published on

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.

இந்நிலையில் முதல்வரின் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை வெளியிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்ற உத்தரவையடுத்து சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வந்தது. அப்போது இது தொடர்பாக காவலர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com