குற்றம்
மதுரை: நடைபயிற்சி சென்ற முதியவரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு
மதுரை: நடைபயிற்சி சென்ற முதியவரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு
மதுரையில் நடைபயிற்சி சென்றவரை கத்தியால் தாக்கி மர்மநபர்கள் செல்போன் பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாடக்குளத்தில் பெரியார் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் செல்வம் (61). இவர் இன்று அதிகாலை அதே பகுதியில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது பின்னாலிருந்து இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் முதியவரை கத்தியால் தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.