சைக்கிளிங் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு: போலீஸ் விசாரணை

சைக்கிளிங் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு: போலீஸ் விசாரணை
சைக்கிளிங் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு: போலீஸ் விசாரணை

கெளதம் கார்த்திக்கின் செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

பிரபல நடிகர் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக். இயக்குநர் மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘ஹர ஹர மகாதேவ்கி’,‘தேவராட்டம்’,  ‘இவன் தந்திரன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில், சைக்கிளில் பயிற்சி மேற்கொண்டிருந்த கெளதம் கார்த்திக்கை தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரின் விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com