\
செல்போன் திருட்டு: 12 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

செல்போன் திருட்டு: 12 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

செல்போன் திருட்டு: 12 வயது சிறுவன் உட்பட இருவர் கைது
Published on

சென்னை அருகே செல்போன்களை திருடி விற்பனை செய்யும் 12 வயது சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர். 

சென்னை புழல்-அம்பத்தூர் சாலையில் போலீசார் இன்று வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றிலிருந்து 3 பேர் திடீரென தப்பி ஓடினர். காரில் இருந்த இருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். பிடிபட்ட இருவரில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டைச் சேர்ந்த வினய் என்பதும் மற்றொருவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 12 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 16 செல்போன்கள், 2 கத்திகள் மற்றும் 4500 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த கும்பல் விஜயவாடாவில் செல்போன்களை பறித்து சென்னைக்கு கொண்டுவந்து ஐஎம்ஈஐ எண்களை மாற்றி, மீண்டும் ஆந்திராவிற்கு புதிய போன்களாக விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் வந்த காரும் ஆந்திராவில் திருடப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க விஜயவாடாவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com