\
​சென்னையில் கள்ளச்சாவி போட்டு டூவீலரை திருடிய இளைஞர்கள்! வீடியோ

​சென்னையில் கள்ளச்சாவி போட்டு டூவீலரை திருடிய இளைஞர்கள்! வீடியோ

​சென்னையில் கள்ளச்சாவி போட்டு டூவீலரை திருடிய இளைஞர்கள்! வீடியோ
Published on

சென்னை கொடுங்கையூரில் இரு சக்கர வாகனத்தை கள்ளச்சாவி கொண்டு இளைஞர்கள் மூவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் திருவள்ளூர் நகர் முதலாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் அசோக்குமார். வழக்கம் போல தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இன்று காலை பார்த்த பொழுது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனது இருசக்கர வாகனம் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மூன்று நபர்கள் கள்ளச்சாவி மூலம் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com