சென்னை: கள்ளச்சாவி போட்டு பட்டப்பகலில் நடந்த பைக் திருட்டு... போலீஸ் வலைவீச்சு

சென்னை: கள்ளச்சாவி போட்டு பட்டப்பகலில் நடந்த பைக் திருட்டு... போலீஸ் வலைவீச்சு

சென்னை: கள்ளச்சாவி போட்டு பட்டப்பகலில் நடந்த பைக் திருட்டு... போலீஸ் வலைவீச்சு
Published on

சென்னை எம்ஜிஆர் நகரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் சாப்ஃட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வகிறார். இவர் தன்னுடைய வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்திருக்கிறார். அப்போது பட்டப்பகலில் வரும் இருவர் கிஷோரின் இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்றுள்ளனர். கிஷோர் குமார் வீட்டை விட்டு வெளியே வந்து தன்னுடைய இரு சக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து பார்த்த போது அடையாளம் தெரியாத 2 பேர் நடந்து செல்வதும் அதில் ஒருவர் கள்ளச்சாவி பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தை சுலபமாக திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது. சிசிடிவியில் பதிவான சக்கர வாகன திருடர்களை எம்ஜிஆர் நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com