குற்றம்
மதுரை இஎஸ்இ அலுவலகத்தில் சிபிஐ சோதனை: இருவர் கைது
மதுரை இஎஸ்இ அலுவலகத்தில் சிபிஐ சோதனை: இருவர் கைது
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மதுரை இஎஸ்ஐ அலுவலக இணை இயக்குநரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மதுரை கேகேநகரில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் துணை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் 2 மணியளவில் அங்கு சென்ற 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர், இணை இயக்குநர் தினேஷ்குமார் அறையில் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற இச்சோதனையில், இணை இயக்குநர் தினேஷ் குமாரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு 15,000 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தனியார் கல்வி நிறுவன பிரதிநிதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.