குற்றம்
இளைஞர் செல்வன் கொலை: காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு
இளைஞர் செல்வன் கொலை: காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த செல்வன் என்ற இளைஞர் நிலத்தகராறில் கடந்த 17ஆம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். அதில் அதிமுக பிரமுகர் திருமணவேல் என்பவருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி, தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள சிபிசிஐடி காவல்துறையினர், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலைவழக்குப் பதிவு செய்துள்ளனர். சிபிசிஐடியின் முதல் தகவல் அறிக்கையில் திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.