குற்றம்
சாத்தான்குளம் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிடம் சிபிசிஐடி விசாரணை
சாத்தான்குளம் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிடம் சிபிசிஐடி விசாரணை
தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கை சிபிசிஐடி மிக தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி இன்று மனுத்தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதனிடையே பென்னிக்ஸின் நண்பர்களிடம் விசாரணை செய்யப்பட்டு சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கொரோனா தன்னார்வலர் என்ற பெயரில் செயல்பட்ட கணபதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.