\
காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது கொலை மிரட்டல் வழக்கு

காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது கொலை மிரட்டல் வழக்கு

காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது கொலை மிரட்டல் வழக்கு
Published on: 

மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, தனியார் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த நித்யா கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி சில நாட்களுக்கு முன் நித்யா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் பாலாஜி அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும், தாக்குவதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து தாடி பாலாஜி  மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com