\
காதல் தம்பதியை தாக்கிய தந்தை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

காதல் தம்பதியை தாக்கிய தந்தை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

காதல் தம்பதியை தாக்கிய தந்தை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

கோவையில் காதல் திருமணம் செய்த தம்பதியை தாக்கிய விவகாரம் தொடர்பாக பெண்ணின் தந்தை, தாய் மாமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டாண்டுகளாக காதலித்துவந்த கோவையைச் சேர்ந்த சினேகா மற்றும் விக்னேஷ்வர் இருவரும் கடந்த ஒன்றாம்தேதி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில், இரு வீட்டாரையும் அழைத்து காவல் துறையினர் சமதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி தம்பதியை வீட்டிற்கு வர வைத்த பெண்ணின் பெற்றோர், தம்பதியை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை காரில் ஏற்றி அழைத்து சென்றபோது, அவினாசி சாலை லட்சுமி மில் சிக்னலில் கூச்சல் எழுப்பி காதல் தம்பதியினர் கதறினர்.

இதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் உதவியுடன் மக்கள் மீட்டனர். சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சினேகா அளித்த புகாரின் பேரில் சினேகாவின் தந்தை ஆறுமுகசாமி, தாய்மாமன் ரமேஷ், பெரியப்பா மகன் முனியசாமி, மற்றும் அமுல் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com