\
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தச்சர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தச்சர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தச்சர் கைது
Published on

சென்னை தண்டையார்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா(20). தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி சூர்யா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com