இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
Published on

ஹைதராபாத்தில் இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில் தனது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் சவுமியா என்ற பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசிந்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அந்தப்பெண் தனது இல்லத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, இச்சம்பவம் தொடர்பாக நள்ளிரவில் அவரது உறவினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இச்சம்பவம் தற்கொலை போல் தெரியவில்லை.வீடு வெளிப் பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலில் தீக்காயங்களை தவிர்த்து பிறகாயங்களும் உள்ளது. கதவை வெளிப்பக்கமாக யார் தாழிட்டது என்பது குறித்து தெரியவில்லை. சம்பவம் நடந்தபோது அவரது கணவர் வீட்டில் இல்லை. அவர் இரவு 8.30 மணியளவில் பணி நிமிர்த்தமாக வெளியில் சென்றுள்ளார்.ஆனால் இந்தச்சம்பவம் நள்ளிரவு 12.30 மணியளவில் நடைப்பெற்றுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம் விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரிய வரும் எனக் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com