ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து கொள்ளை: 16 சவரன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
கோபிசெட்டிப்பாளையம் அருகே ஆடிட்டரின் வீட்டில் பீரோவை உடைத்து 16 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர்.
ஆடிட்டர் பழனிச்சாமி குடும்பத்துடன் வெளியூர் சென்று வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 16 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையம்புதூர் தனியார் ஆடிட்டர் பழனிசாமி தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் வசித்துவருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் குடும்பத்தினருடன் பெருந்துறை அருகில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் கோயிலிருந்து குடும்பத்தினர் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதால் பழனிச்சாமி மட்டும் வடுகபாளையம்புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து வேலை விஷயமாக சென்னைக்கு சென்றுவிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆடிட்டர் மனைவி காயத்திரி மட்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தாகவும் அதனைத் தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளதாகவும் கோபி காவல்நியைத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில் கோபி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வடுகபாளையம்புதூர் பகுதியிலிருந்து மெயின் ரோடு சந்திக்கும் இடங்களில் ஏதாவது சிசிடிவி கேமராக்கள் உள்ளனவா என்றும் தடவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் தடயங்கள் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராமப்புறத்தில் உள்ள வீட்டில் தங்கநகை மற்றும் பணம் கொள்ளைபோன சம்பவம் இப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.