குற்றம்
கொத்தடிமையாக பணியாற்ற மறுத்ததால் பெண்ணின் மூக்கை அறுத்த கொடுமை
கொத்தடிமையாக பணியாற்ற மறுத்ததால் பெண்ணின் மூக்கை அறுத்த கொடுமை
கொத்தடிமையாக பணியாற்ற மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவருடன் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண்ணை கொத்தடிமையாக பணியாற்றும்படி சிலர் வற்புறுத்தியதாகவும், அந்த பெண் அதை ஏற்காததால், அவரது மூக்கை அறுத்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகே, அப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.