“பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை” - தங்கையை கொலை செய்த அண்ணன்
மேலூர் அருகே பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணனே கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகரம்பட்டி கீழப்பட்டியில், சகுந்தலாதேவி என்ற பெண் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணன் சௌந்தரபாண்டியன் என்பவர்தான் கொலையாளி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேலவளவு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, “சகுந்தலாதேவிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில். கடந்த 5 வருடமாக கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார், இதனிடையே சகுந்தலாதேவி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார், அதனை நான் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் குடும்ப மானத்தைக் காக்க தங்கையை படுகொலை செய்தேன்” என சௌந்தரபாண்டியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

