\
குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சகோதரர்கள்.. கொலையில் முடிந்த சண்டை

குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சகோதரர்கள்.. கொலையில் முடிந்த சண்டை

குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சகோதரர்கள்.. கொலையில் முடிந்த சண்டை
Published on

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் குடி போதையில், பீர்பாட்டிலால் அண்ணனை தாக்கி கொலை செய்த தம்பியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பள்ளி தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்துவரும் இவர், குடி போதையில் வீட்டில் இருந்துள்ளார்.

அந்த சமயம் இவரது உடன் பிறந்த தம்பி முருகனும் குடி போதையில் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் வீட்டினுள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது தம்பி முருகன் உடைக்குள் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலால் கல்யாணகுமாரை பலமாக தாக்கி உள்ளார்.

இதில் பாட்டில் உடைந்து தலைப்பகுதியில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கல்யாணகுமார் உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தளவாய்புரம் காவல்துறையினர் கல்யாணகுமார் உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மது போதையில் இருந்த தம்பி முருகனை கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com