கோவாவில் கணவருடன் சுற்றுலா வந்த பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த உள்ளூர் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவா மாநிலம் அராம்போல் கடற்கரை அருகே ஸ்வீட் வாட்டா் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் பிரிட்டனை சோ்ந்த பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் தனது கணவருடன் ஓய்வு எடுத்துள்ளாா். கோவாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மசாஜ் சேவைகள் வழங்கப்படுவது வழக்கம் என்பதால், அந்தப் பெண்ணுக்கும் உள்ளூரை சோ்ந்த வின்சென்ட் டிசோஸா (32) என்ற நபா் மசாஜ் செய்துள்ளாா். அப்போது அவா் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இந்தச் சம்பவம் ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் உதவியுடன் அந்தப் பெண் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் 376-வது பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ் வழக்குப் பதிவு செய்து வின்சென்ட் டிசோஸாவை காவல் துறையினா் கைது செய்தனா்.
கணவரின் கண் முன்னே பிரிட்டன் பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவாவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாம்: பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ மீது வழக்கு