திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகைகள், ரூ.28 லட்சம் பணம் கொள்ளை

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகைகள், ரூ.28 லட்சம் பணம் கொள்ளை
திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகைகள், ரூ.28 லட்சம் பணம் கொள்ளை

திருப்பூரில் 120 பவுன் நகை, 28 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவரின் மகன் சபியுல்லா (54). பிரிண்டிங் நிறுவனம் நடத்திவரும் இவர், திருப்பூர் - தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகரில் கடந்த 19 வருடங்களாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சபியுல்லா கடந்த 2-ஆம் தேதி தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில், சபியுல்லா வீட்டின் அருகில் குடியிருக்கும் அவரது உறவினரான ஷியாத்துல்லா என்பவர், சபியுல்லா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சபியுல்லாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சபியுல்லா வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தது.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி ஆய்வாளர் கணபதி தீவிர விசாரணை மேற்கொண்டார்.

போலீசார், அருகில் குடியிருப்பவர்கள் மற்றும் பணிக்கு வந்து செல்பவர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார் தரப்பில் 120 சவரன் தங்க நகையும், சுமார் 47 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளை அடித்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 19 லட்சம் பணம் அருகில் இருந்த அறையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வீரபாண்டி போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com