கோவை அருகே உள்ள அம்மன் கோயிலில் மர்ம நபர் ஒருவர் கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
கோவை காந்திபுரம் அருகே உள்ளது சித்தாபுதூர். அப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் நேற்று இரவு ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் உண்டியலைக் உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என தெரிய வந்தது. உடனே இது குறித்து கோயில் நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் செய்ததையடுத்து காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். பின் சிசிடிவி காட்சிகளை கொண்டு வழக்குப் பதிவு செய்து போலீஸார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
இதைபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.