குற்றம்
புதுக்கோட்டை: பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை
புதுக்கோட்டை: பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் ரீதியிலாக துன்புறுத்தி கொலை செய்த குற்றவாளிக்கு மகிளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை குஜராத் மாநிலத்தை சேர்ந்த டேனிஷ் பட்டேல் என்பவர் பாலியல் ரீதியிலாக துன்புறுத்தி கொலை செய்ததாக மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்யா தீர்ப்பை வழங்கினார்.
அதில், குற்றவாளியான டேனிஷ் பட்டேலுக்கு 3 பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.