சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி 3-வது திருமணம்: போர்வெல் ஓட்டுநர் போக்சோவில் கைது
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நம்பியூர் அருகே 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி 3வதாக திருமணம் செய்து கொண்ட இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பூச்சநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் போர்வெல் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ள நிலையில், ரவியின் முதல் மனைவி வசந்தா கருத்து வேறுபாடு காரணமாக குன்னத்தூரில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ரவி இரண்டாவது மனைவி பிரியாவுடன் பூச்சநாய்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். அவரது இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நம்பியூர் காவல் நிலையத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாறன் தம்பதியினர் தங்களது 15 வயது மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தனர்,
அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த நம்பியூர் காவல் துறையினர் சிறுமியை தேடி வந்தனர். அப்போது காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமி போர்வெல் ஓட்டுநனர் ரவியுடன் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது,
தகவல் அறிந்து சம்பவ இடத்திறக்கு சென்ற நம்பியூர் காவல் துறையினர் அவர்களை பிடித்து விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில் ரவி தனது வீட்டின் அடுத்த தெருவில் உள்ள சிறுமியை சந்தித்து ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி போன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு சிறுமியை 3-வதாக திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

