\
தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் குண்டுவீச்சு

தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் குண்டுவீச்சு

தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் குண்டுவீச்சு
Published on

சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
காவல் நிலைய வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டுள்ளது. பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் குண்டு வீசி சென்றதாகத் தெரிகிறது. சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா செயல்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும், மண்ணெண்ணெய் குண்டு வீசியது யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com