“சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் என்னை மிரட்டுகின்றனர்” நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்!

“கொடைக்கானலில் வீடு கட்டும் என்னை, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டுகிறார்கள்”- நடிகர் பாபி சிம்ஹா
 நடிகர் பாபி சிம்ஹா
நடிகர் பாபி சிம்ஹா புதிய தலைமுறை

கொடைக்கானலில் வீடு கட்டும் தன்னை, சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் மிரட்டுவதாக நடிகர் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் தன் தந்தை குடியிருந்த வீட்டை புதுப்பித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, கட்டுமான பணிகளுக்காக ஜமீர் என்ற பொறியாளரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது.

ஜமீர்- பொறியாளர் , மகேந்திரன்- சமூக ஆர்வலர்
ஜமீர்- பொறியாளர் , மகேந்திரன்- சமூக ஆர்வலர் pt

ஆனால், வாங்கிய பணத்திற்கு உரிய கட்டுமானத்தை மேற்கொள்ளாமல் ஜமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பாபி சிம்ஹா புகார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இது குறித்து அவர் கூறுகையில், “சமூக ஆர்வலர் என்ற
போர்வையில் மகேந்திரன் என்பவர் என்னை மிரட்டுகிறார்.
அனைவராலும் அறியப்பட்ட நடிகரான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும்? இந்த பிரச்னையை தீர்க்க தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன். எனது வீட்டுக்கு பட்டா இல்லை என்ற வதந்தியையும் சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com