Instagram fraud
Instagram fraud Rahman

எக்கச்சக்கமாக பெண்களின் அந்தரங்க படங்கள்; இன்ஸ்டாவில் பெண் போல நடித்து பிளாக் மெயில் செய்த இளைஞர்!

பெண் எனக்கூறி இன்ஸ்டாகிராம் மூலமாக பல பெண்களைத் தொடர்புகொண்டு பேசி, அவர்கள் ஆடைகளின்றி காட்சியளிக்கும் படங்களை வாங்கி வீடியோ காலில் பேசும்படி மிரட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
Published on

புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திவாகர் என்பவர், தன்னைப் பெண் என அடையாளப்படுத்திக்கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களைத் தொடர்புகொண்டு அவர்களது புகைப்படங்களைக் கேட்டுள்ளார். அவர்களது உடல் அமைப்புக்கு என்னமாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்பதைக் கூறுவேன் எனப் பேசி, பல பெண்கள் ஆடைகள் இல்லாமல் உள்ள படங்களை வாங்கி இருக்கிறார். பின்னர், வேறு இன்ஸ்டாகிராம் முகவரியிலிருந்து அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் ஆடைகளின்றி இருக்கும் படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதே நிலையில் அந்த பெண்கள் தன்னிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என்றும், தவறினால் படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்ததை அடுத்து, திவாகர் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com