கைது செய்யக் கோரி சாலை மறியல்
கைது செய்யக் கோரி சாலை மறியல்PT Tesk

DYFI தலைவர் மீது பாஜக ஆதரவாளர் கொலை முயற்சி - திருச்சியில் பரபரப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைத் தலைவரை கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்யக் கோரி அச்சங்கத்தினர் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைத் தலைவர் தவ்பிக் என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்றவர்கள், தாக்குதலுக்குப்பின் தப்பி ஓடியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான முறையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தவ்பிக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யக் கோரி சாலை மறியல்
கைது செய்யக் கோரி சாலை மறியல்

இந்நிலையில் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், திருச்சி அரசு பொது தலைமை மருத்துவமனை முன்பாக நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகரின் பிரதான சாலை என்பதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவரை வெட்டியவர் பாஜக ஆதரவாளர் வினோத் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தவ்பிக்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சிக்கான காரணமாக, அவர்களுக்குள் நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணையின் முதற்கட்ட தகவலில் இது வெளியாகி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com