\
சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவு - பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவு - பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவு - பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
Published on

மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக, பாஜக செயற்குழு உறுப்பினர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில், பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி என்பவர் வீடியோ பதிவிட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், இரண்டு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல கடந்த 28-ம் தேதி பாஜக நிர்வாகியான வினோஜ் பி செல்வம், மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com