மூன்றாவதாக பெண் குழந்தை.. 6 மாத கர்ப்பிணியை அடித்துக்கொன்ற மாமியார்! பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்துக்கொள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் சட்ட விரோதமாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்
கர்பிணிப்பெண்
கர்பிணிப்பெண்PT

இரண்டுபெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக 6 மாத பெண் சிசுவை சுமந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்

பீகார் மாநிலத்தில் கேவ்வல் பிகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் இதய் சவுக்கான் என்ற விவசாயி. இவரது மனைவி குஷம் தேவி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு பார்வை குறைபாடுடைய ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், மீண்டும் குஷம் தேவி கர்ப்பம் தரித்துள்ளார்.

6 மாதம் ஆன நிலையில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்துக்கொள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் சட்ட விரோதமாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். இதில் குஷம் தேவி கருவில் வளர்வது பெண் குழந்தை என்று தெரியவந்த நிலையில் கோபமுற்ற அவரது மாமியார் மற்றும் அவரது கணவரும் குஷம் தேவியை அடித்து உதைத்துள்ளனர்.

இதில் குஷம் தேவி இறந்து இருக்கிறார். இந்நிலையில் அவரது மாமியாரும் அவரது கணவரும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர்.

நீண்ட நேரமாக குழந்தைகளின் அழுகுரல் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த சமயம் குஷம் தேவி தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முன்னதாக குஷம் தேவியின் உடல் பிஹார்ஷ்ரீப் சதார் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com