ரயில்வே வேலைக்காக, அப்பாவைக் கொல்ல கூலிப்படை: கிரிமினல் மகன் கைது!

ரயில்வே வேலைக்காக, அப்பாவைக் கொல்ல கூலிப்படை: கிரிமினல் மகன் கைது!

ரயில்வே வேலைக்காக, அப்பாவைக் கொல்ல கூலிப்படை: கிரிமினல் மகன் கைது!
Published on

அப்பாவைக் கொன்றால், அவர் பார்க்கும் ரயில்வே வேலை கிடைக்கும் என நினைத்து கூலிப்படையை ஏவிய, கிரிமினல் மகன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள ஜமல்பூர் ரயில்வே ஒர்க்ஷாப்பில் வேலை பார்ப்பவர் ஓம் பிரகாஷ் மண்டல். கடந்த 24-ம் தேதி இவரை இரண்டு பேர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் அவர் உயிர் தப்பினார். இருந்தாலும் கையில் குண்டு பாய்ந்த து. அடையாளம் தெரியாதவர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டதாக போலீசில் புகார் செய்தார் மண்டல்.

விசாரணையில் இறங்கினர் போலீசார். அங்குள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் இரண்டு பேர் ஒருவரை துப்பாக்கியால் சுடுவது பதிவாகி இருந்தது. இதையடுத்து சுனில் குமார், ரவிரஞ்சன் குமார் ஆகியோரை அமுக்கியது போலீஸ். அவர்களிடம் விசாரித்தபோது போலீ ஸ்காரர்களே அசந்துவிட்டனர். 

மண்டல், இந்த மாதம் 30 -ம் தேதியோடு வேலையை விட்டு ஓய்வு பெறுகிறார். பணியில் இருக்கும்போதே அவர் இறந்தால், அந்த வேலை தனக்கு கிடைக்கும் என திட்டம் போட்டார், அவரின் இளைய மகன் பவன் குமார். இதற்காகக் கூலிப்படையை தேடிக்கண்டுபிடித்தார். அவர்களிடம் திட்டத்தைச் சொன்னார். இதற்காக ரூ.2 லட்சம் கூலி பேசப்பட்டது. அட்வான்ஸாக ரூ.25 ஆயிரத்தைக் கொடுத்தார் பவன். கதையை முடித்ததும் பாக்கியை தருவதாக உறுதி கூறினார். இதையடுத்து அவர்கள் மண்டலை சுட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிவிட்டார். 

பவனை போலீசார் கைது செய்துள்ளனர். கிரிமினல் மகனின் இந்த செயலை நினைத்து நொந்து போயிருக்கிறார் அப்பா, மண்டல். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com