புவனேஷ்வர் டூ பெங்களூரூ: 13 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

புவனேஷ்வர் டூ பெங்களூரூ: 13 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

புவனேஷ்வர் டூ பெங்களூரூ: 13 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
Published on

காட்பாடியில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில், காட்பாடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவலர்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் சென்ற விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டபோது பாத்ரூம் அருகே 3 பைகளில் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்ரதர் செட்டி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com