பெங்களூரில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து 2 வருடங்களாக மிரட்டி வந்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரில் 45 வயதான ஆட்டொ ஓட்டுநர் ஒருவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மனைவி தினமும் கூலி வேலைக்கு செல்பவர். கடந்த 2016 ஆம் ஆண்டு மகள் பருவமடைந்துள்ளார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர், மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என அச்சிறுமியை மிரட்டியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர்.
இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளது. இந்நிலையில் மிகவும் சிரமப்பட்ட சிறுமி தனது தந்தையின் செயலை அம்மாவிடம் கூறுவது என முடிவெடுத்து தெரிவித்துள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநரின் மனைவி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மறைந்திருந்து கணவரின் நடவடிக்கையை நோட்டமிட்டுள்ளார். அன்று மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதை கண்டறிந்து சிறுமியை காப்பாற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் மீது 376, 506, 511 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.