யார் பிச்சை எடுப்பது என்பதில் இருவரிடையே மோதல் - 2 ரூபாய்க்காக முதியவர் அடித்துக்கொலை

யார் பிச்சை எடுப்பது என்பதில் இருவரிடையே மோதல் - 2 ரூபாய்க்காக முதியவர் அடித்துக்கொலை

யார் பிச்சை எடுப்பது என்பதில் இருவரிடையே மோதல் - 2 ரூபாய்க்காக முதியவர் அடித்துக்கொலை
Published on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் மற்றொரு நபரை நடுரோட்டில் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நபர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் பிச்சை எடுத்தபின் வடசேரி பேருந்து நிலையம், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மட்டுமல்லாமல் நகரப்பகுதிகளில் அமைந்திருக்கும் பல பகுதிகளில் இரவு நேரங்களில் தங்கி விடுகின்றனர். பகல் நேரங்களில் இவர்கள் கடைகளிலும், ரோட்டோரங்களிலும் பிச்சை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காவி உடை அணிந்த நபர் ஒருவர் இன்று நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகாமையில் உள்ள கடைகளில் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் மற்றொரு நபரும் தொடர்ந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

ஒருவர் தமிழிலும் ஒருவர் ஹிந்தியிலும் பேசிய நிலையில் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் தனது கையிலிருந்த கட்டை கம்பால் 50 வயது மதிக்கத்தக்க நபரை நடுரோட்டில் அடித்து தள்ளியதோடு நடு ரோட்டிலேயே பலரும் வேடிக்கை பார்த்தநிலையில், தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வடசேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் பகுதியிலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் ஜார்க்கண்ட் மாநில பிச்சைக்காரர் செல்லும் கடைகளுக்கு முன்பாக உயிரிழந்தவர் சென்று பிச்சை எடுத்ததாகவும், இறுதியாக ஒரு வணிகக் கடைக்குச் சென்றபோது அங்கு உயிரிழந்த நபருக்கு இரண்டு ரூபாய் கிடைத்துள்ளது. ஆனால் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரருக்கு பணம் கிடைக்காததால் தனக்கு அந்த இரண்டு ரூபாயில் ஒரு ரூபாய் பங்குவேண்டும் என கேட்டுத் தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com