பல உயிர்கள் பலியானதை பார்த்த பிறகு.. மீண்டும் தலை தூக்கும் பேனர் கலாச்சாரம்! தடுக்குமா அரசு?

பேனர்களால் பல விபத்துகளை சந்தித்து வந்த பொதுமக்கள் அதை அகற்றும்படி வலியுறுத்தியதின் பெயரில் பேனர் கலாசாரமானது சற்றே ஒதுங்கியிருந்த நிலையில் கோவையில் பேனர் சரிந்து மீண்டும் ஒரு விபத்து பேனர் கலாசாரத்திற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா?

நெரிசல் மிகுந்த சாலைகளில் பேனர்கள் வைக்கப்படுவதால் பல விபத்துகள் அடிக்கடி ஏற்பட்ட நிலையில் தமிழகத்தில் பேனர் கலாசாரம் சிறிது காலம் கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால், தமிழகத்தில் மீண்டும் பேனர் கலாசாரம் தலை தூக்கி இருக்கிறது. இந்த பேனர் கலாசாரத்திற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

அண்மையில் கோவை கருமத்தம்பட்டியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பேனர்கள் வைப்பதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், கோவையில் முக்கியப்பகுதியில் பேனர்கள் வைக்க மாநகராட்சி நிர்வாகமே அழைப்பு விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை மறுத்த ஆட்சியாளர் ப்ரதாப் அனுமதியின்றி கோவை மாநகராட்சியில் பேனர் வைக்கமுடியாது என்று தெரிவித்தார்.

இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com