சென்னையில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை அடித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும், எடுக்கவும் வரிசையில் காத்திருந்தனர். வாரத்தின் முதல் நாள் என்பதால் வங்கியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வாடிக்கையாளரிடமிருந்து ரூ.6 லட்சத்தை பறித்துக்கொண்டு வெளியில் ஓட முயற்சித்துள்ளார்.வங்கியில் இருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாவலர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். உடனே அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனையடுத்து வங்கி அதிகாரிகள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் துப்பாக்கியை காட்டி வங்கியில் இருந்து வெளியில் வந்த அந்த நபரை சிலர் துரத்தியுள்ளனர்.இதனைக்கண்ட போக்குவரத்து காவலர்கள் அந்த நபரை துரத்தி பிடித்துள்ளனர். தற்போது அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.