திருச்சி: வாங்காத பொருளுக்கு மாதத் தவணை: EMI-யில் செல்போன் வாங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்

திருச்சி: வாங்காத பொருளுக்கு மாதத் தவணை: EMI-யில் செல்போன் வாங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்
திருச்சி: வாங்காத பொருளுக்கு மாதத் தவணை: EMI-யில் செல்போன் வாங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்

மாத தவணைக்கு செல்போன் வாங்கியவருக்கு வாங்காத ஏசி, வாஷிங் மெஷின், டிவிக்கும் தவணைத் தொகை எடுத்த திருச்சி தனியார் நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். 

திருச்சி பொன்னகர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் ஏற்கெனவே வீட்டு உபயோகப் பொருட்களை (பஜாஜ்) தனியார் நிதி நிறுவனம் மூலம் மாத தவணையில் வாங்கி அதற்கான முழுத் தொகையையும் கட்டி முடித்துள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் ஒரு புதிய கைபேசியை பஜாஜ் நிதி நிறுவனம் மூலம் விக்னேஸ்வரன் மாத தவணையில் வாங்கியுள்ளார்.

முதல் மாத தவணையில் அவருக்கு குறிப்பிட்ட 3600 ரூபாயைவிட கூடுதலாக 5000 ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விக்னேஸ்வரன் தனியார் நிதி நிறுவனத்திடம் முறையிட்டபோது சரிவர பதிலளிக்காததால் அந்நிறுவனத்திடம் மீண்டும் இவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்துள்ளார்.

இரண்டாவது மாதத்திலும் அதேபோல் தவணை ரூபாயுடன் 5000 ரூபாய் கூடுதலாக வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதையறிந்து நேரடியாகச் சென்ற அவர், தான் வாங்கிய பொருளுக்கு தவணைத் தொகை 3206 ரூபாய் தான்; ஆனால் 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக எடுப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார். அதற்கு பஜாஜ்(வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் விநியோகஸ்தர்) தரப்பிலிருந்து நீங்கள் டிவி, வாஷிங் மெஷின், மிக்ஸி, ஏசி என வாங்கியுள்ளீர்கள். அதற்கு 61 ஆயிரம் ரூபாய் மொத்தம் வருகிறது. அதனால் கூடுதலாக மாதத் தவணை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படுவதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதைக்கேட்டு அதிர்ந்துபோன விக்னேஸ்வரன் நான் வாங்கியது கைபேசி மட்டும்தான். ஆனால் மூன்று பொருட்கள் என்னுடைய ஆவணங்களை வைத்து வேறு யாருக்கோ கொடுத்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தும் அவருக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர்  தில்லை நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது காவல்துறையினரும் புகாரை விசாரிக்காமல் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியரிடம் பேசுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பெண் ஊழியரை ஏற்கெனவே தனியார் நிதி நிறுவனம் பணிநீக்கம் செய்து விட்டது.

தற்பொழுது யாரோ வாங்கிய பொருளுக்கு தன் வங்கிக்கணக்கில் மாதத் தவணை எடுக்கப்படுவது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பும் விக்னேஷ்வரன் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். அந்த பெண் ஊழியர் ஏராளமானோரிடம் இதேபோல் போலி ஆவணங்களை உருவாக்கி ஏமாற்றி உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com