குற்றம்
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கிற்கு ஜாமீன்
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கிற்கு ஜாமீன்
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கிற்கு தற்போது நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.