\
மைக்ரோவேவ் ஓவனுக்குள் பிணமாக கிடந்த பெண் குழந்தை - தாய் மீது சந்தேகம்

மைக்ரோவேவ் ஓவனுக்குள் பிணமாக கிடந்த பெண் குழந்தை - தாய் மீது சந்தேகம்

மைக்ரோவேவ் ஓவனுக்குள் பிணமாக கிடந்த பெண் குழந்தை - தாய் மீது சந்தேகம்
Published on

டெல்லியில் மைக்ரோவேவ் ஓவனுக்குள் 2 மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவனுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துணியில் சுற்றப்பட்டு இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் தாயே குழந்தையை கொன்று இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. ''குழந்தை எவ்வாறு இறந்தது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவத்தில் உண்மைத்தன்மை கண்டறிய அவரது தாய், தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பெண் குழந்தை பிறந்ததில் அதன் தாய்க்கு விருப்பமில்லை என்பது  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது'' என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி குழந்தையின் தாத்தா கூறுகையில், ''வீட்டில் குழந்தையின் தாய் மட்டும்தான் இருந்ததால் குழந்தையின் அம்மா தான் கொலை செய்திருப்பார் என்று நினைக்கிறோம்'' என கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஆபாச வீடியோ எடுத்து இளம்பெண்ணுக்கு மிரட்டல்- பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது



logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com