\
பிறந்து சில மணி நேரமான பெண் சிசு ஏரியில் வீசிக் கொலை

பிறந்து சில மணி நேரமான பெண் சிசு ஏரியில் வீசிக் கொலை

பிறந்து சில மணி நேரமான பெண் சிசு ஏரியில் வீசிக் கொலை
Published on

வேலூர் மாவட்டத்தில் பிறந்த சில மணி நேரமான பச்சிளம் பெண் சிசுவை, ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூரில் உள்ள பேரப்பேரி கிராமத்தில் பிறந்த சில மணி நேரமான பச்சிளம் பெண் சிசு ஒன்று அந்த பகுதியில் உள்ள ஏரியில் சடலமாக கிடந்துள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பெண் சிசுவை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்த பெண் சிசுவின் பெற்றோர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே, சடலத்தை உறவினர்களிடன் ஒப்படைப்பதுக் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com