\
ஆவடி: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை

ஆவடி: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை

ஆவடி: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை
Published on: 

ஆவடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய திருவள்ளூர் மகிளா நீதிமன்றம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் (32) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ஜெய்கணேஷை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ந நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெய்கணேஷ்க்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 4000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com