’வா திருமணம் செய்து கொள்ளலாம்’ - மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த நபர்!

’வா திருமணம் செய்து கொள்ளலாம்’ - மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த நபர்!
’வா திருமணம் செய்து கொள்ளலாம்’ - மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த நபர்!

முதல் திருமணம் நடந்ததை மறைத்து இரண்டாவதாக மாற்றுத் திறனாளி பெண்ணை திருமண ஆசை வார்த்தை கூறி தாலிகட்டி குடும்பம் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி ரோமன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மகள் வினோதினி. இவர் இப்பகுதியில் உள்ள தனியார் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்கு வந்து செல்லும்போது உத்தமபாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்பு முகமது யூசுப் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து ’வா நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று ஆசை வார்த்தை கூறி வினோதினியை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று தாலி கட்டி 12 நாட்களாக குடும்பம் நடத்தியுள்ளார்.

பின்பு யூசுப்புக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வினோதினி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட உத்தமபாளையம் காவல்துறையினர் ஆட்டோ டிரைவர் முகமது யூசுப் மீது வழக்குபதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com